பஞ்சு மிட்டாயில் கலந்திருக்கும் வண்ண நிறமூட்டி உடல் நலத்திற்கு ஆபத்தானது என்று கண்டறியப்பட்ட நிலையி அதற்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்ட நிலையில், கர்நாடக மாநில அரசும் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், கோபி மஞ்சூரியன் தயாரிப்பில் செயற்கை வண்ணங்கள் பயன்படுத்தக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பஞ்சு மிட்டாய் விற்பனை செய்தாலும், கோபி மஞ்சூரியன் தயாரிப்பில் செயற்கை வண்ணம் பயன்படுத்தினாலும், உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டம் 2006 விதி 59ன் கீழ் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் எச்சரித்துள்ளார்.