சென்னை மாவட்டம் வளசரவாக்கம் சவுத்ரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் ஆடிட்டராக இருந்தார். இவரது மனைவி தங்கம். இந்த நிலையில் நடராஜனுக்கு சொந்தமான பங்களாவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அறிந்த 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்க போராடி வருகின்றனர். ஆனால் இந்த தீ விபத்தில் நடராஜன், தங்கம் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த வீட்டில் வேலை பார்த்த பணிப்பெண் ஜன்னல் வழியாக கீழே குதித்து உயிர் தப்பினார்.

அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதற்கிடையே தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.