ராமஜென்ம பூமி அறக்கட்டளை அடுத்த 15 முதல் 20 நாட்களுக்கு அயோத்திக்கு பக்தர்கள் வர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளது. மகா கும்பமேளாவில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில் புனித நீராடி விட்டு பக்தர்கள் அயோத்தி ராமர் கோவிலில் தரிசனம் செய்வதற்காக வருகின்றனர்.

அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதால் கூட்டத்தை கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே அடுத்த 15-20 நாட்களுக்கு பக்தர்கள் அயோத்திக்கு வர வேண்டாம் என ராமஜென்ம பூமி அறக்கட்டளை வேண்டுகோள் விடுத்துள்ளது.