
ஹோட்டல் ஒன்றில் பதிவான சிசிடிவி வீடியோ ஒன்றில் ஹெல்மெட் அணிந்திருந்த திருடன் உணவு டெலிவரி செய்யும் பணியாளர் போல நடித்து அங்கு உணவுக்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த பெண்களின் செயினை பறித்து சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் குழுவாக பெண்கள் சிலர் ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஹெல்மெட்டோடு ரெஸ்டாரண்டுக்குள் மிக நீண்ட நேரம் நின்று கொண்டிருக்கும் அந்த திருடன் தனக்கு அருகில் குழுவாக சாப்பிட்டுக் கொண்டிருந்த பெண்களை அவர்களுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
அந்த பெண்களும் தனக்கு பக்கத்தில் இருப்பது திருடன் என்பது தெரியாமல் டெலிவரி பாய் என்று நினைத்து சாதாரணமாக தங்களுக்குள் உரையாடலை தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது சமயம் பார்த்து அந்த திருடன் பெண்ணின் கழுத்தில் இருந்து செயினை பறித்துக் கொண்டு வேகமாக தப்பி ஓடுகிறான். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
हरियाणा के पानीपत में एक रेस्टोरेंट के भीतर चेन स्नैचर का दुस्साहस देखिए। pic.twitter.com/WLuLYzycJe
— SANJAY TRIPATHI (@sanjayjourno) June 8, 2024