குஜராத் மாநிலத்தில் பிலோதா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள ஒரு விவசாய கிணற்றில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக துர்நாற்றம் வீசி உள்ளது. இது குறித்த தகவலின் பேரில் போலீசார் ஆய்வு மேற்கொண்டதில் ஒரு பெண்ணின் சடலம் 22 துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில் கண்டறியப்பட்டது. அந்தப் பெண்ணின் கையில் எச்பி என்று அடையாளம் இருந்தது. இந்த அடையாளத்தை வைத்து விசாரணை மேற்கொண்டதில் உயிரிழந்த பெண் ஹசுமதி என்பது தெரிய வந்தது. இந்தப் பெண்ணின் கணவரான காவல்துறை அலுவலர் அரவிந்த் மர்டா தாமூர் என்பவரை பிடித்து காவல்துறையினர் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது.

அதாவது குடும்ப தகராறில் தன்னுடைய மனைவி மற்றும் 5 வயது மகனை கொலை செய்து 22 துண்டுகளாக அவர்களின் உடல்களை வெட்டி கிணற்றில் வீசி உள்ளதாக அரவிந்த் தெரிவித்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்குப் பிறகு தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அரவிந்துக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் மனைவி மற்றும் மகனை கொலை செய்ய உடந்தையாக இருந்த இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.