இந்தியாவில் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மருத்துவ காப்பீடு எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஒரே நேரத்தில் இரண்டு மருத்துவ காப்பீடுகள் எடுத்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். பொதுவாக நீங்கள் பணிபுரியும் அலுவலகங்களில் உங்களுக்கு ஒரு மருத்துவ காப்பீடு வழங்கப்படும். அதன்பிறகு நீங்கள் தனிப்பட்ட முறையில் ஒரு மருத்துவ காப்பீடு எடுத்துக் கொள்ளலாம். ஆனால் 2 மருத்துவ காப்பீடுகளையும் ஒரே நேரத்தில் க்ளைம் செய்யக்கூடாது.

இப்படி செய்வது சட்டப்படி குற்றமாகும். உதாரணமாக உங்களுக்கு மருத்துவ செலவிற்கு தற்போது 8 லட்ச ரூபாய் தேவைப்படுகிறது என்றால் உங்கள் அலுவலகத்தில் 5 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு இருக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம். முதலில் நீங்கள் அலுவலகத்தில் கொடுத்த மருத்துவ காப்பீடை பயன்படுத்தி கொள்ள வேண்டும். அதன் பிறகு கூடுதல் தேவைக்காக நீங்கள் தனிப்பட்ட முறையில் போட்டுக் கொண்ட மருத்துவ காப்பீடை கிளைம் செய்து கொள்ளலாம். ஆனால் மருத்துவமனைகளில் ஒரு மருத்துவ காப்பீட்டை மட்டுமே கிளைம் செய்ய அனுமதி இருக்கிறது.

ஒருவேளை உங்களுடைய மருத்துவ செலவு காப்பீட்டை மீறி செல்லும் போது மருத்துவமனை வழங்கிய பில்களை நகலெடுத்து அட்டஸ்டெட் வாங்கி இரண்டு மருத்துவ காப்பீடுகளையும் மருத்துவ காப்பீடு நிறுவனங்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். அந்த நிறுவனம் உங்களுக்கு கூடுதலாக தேவைப்படும் மருத்துவ காப்பீட்டுக்காக இரண்டாம் மருத்துவ காப்பீட்டு நிறுவனத்திற்கு கடிதம் எழுதி அனுப்பும்.

அதன் பிறகு இரண்டாம் காப்பீடு தொகையை நீங்கள் தாமதம் இன்றி பெற்றுக் கொள்ளலாம். இது தொடர்பான முழு விவரங்களை தெரிந்து கொள்ள மருத்துவ காப்பீடு நிறுவனத்தின் சர்வீஸ் சென்டருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். மேலும் எப்போதுமே அலுவலகம் உங்களுக்கு வழங்கிய மருத்துவ காப்பீடை தான் முதலில் பயன்படுத்த வேண்டும். அதன் பிறகு தான் நீங்கள் தனிப்பட்ட முறையில் எடுத்த மருத்துவ காப்பீட்டை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.