தூத்துக்குடி அருகே இருக்கும் தனியார் பள்ளியில் சுரேஷ் என்பவர் சமையல்காரராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் சுரேஷ் அதே பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மனைவியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் சுரேஷை கைது செய்து விசாரணை நடத்தினர். அதன் பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.