பாஜக உடன் கூட்டணியை முறித்துக்கொண்ட அதிமுக, மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணியை இறுதி செய்து நேற்று முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருந்தது. இதனால் பாஜகவுடன் கூட்டணி அமைய வாய்ப்பே இல்லை என்பது உறுதியானது. இந்நிலையில், காலை முதல் 4 மணி நேரமாக அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது. 2022ல் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் இச்சோதனை நடக்கிறது