
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஜூலை 31 நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருமானவரி கணக்கு தாக்கல் செய்ததாக நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுவரை மொத்தம் ஏழு கோடிக்கும் மேற்பட்டோர் தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் ஐ டி ஆர் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் நிதி அமைச்சகம் இதுவரை வெளியிடவில்லை. இதனால் இன்று முதல் ஐடி ஆர் தாக்கல் செய்வோர் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.