விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேட்டு முள்ளிகுளத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். அவரது மகன் கோபி கண்ணன்(20). கடந்த சனிக்கிழமை கோபி கண்ணன் தனது இருசக்கர வாகனத்திற்கு எரிபொருள் நிரப்புவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மல்லி ராமகிருஷ்ணாபுரம் பேருந்து நிலையம் அருகே சென்றபோது எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனத்தின் மீது கோபிகண்ணன் ஓட்டிச் சென்ற வாகனம் நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் கோபிகண்ணன் மற்றொரு வாகனத்தில் பயனித்த சிவா(15), லிங்கதுரை(16) மற்றும் மாரீஸ்வரன்(15) ஆகிய நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் விபத்தில் சிக்கிய நான்கு பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு கோபி கண்ணனை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். மற்ற 3 பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.