
கரூர் பேருந்து நிலையத்திற்கு வெளியே மேற்கு பிரதட்சணம் சாலையில் அரசு மதுபான கடை அமைந்துள்ளது. அந்த கடைக்கு அருகிலேயே அரசு அனுமதி பெற்ற மது கடை இருக்கிறது. நேற்று முன்தினம் காலை 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் மது குடித்துவிட்டு அந்த பகுதியில் ரகளை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த பெண் தான் பல்லடத்தைச் சேர்ந்தவர் என்றும், குடிபோதையில் தன்னுடன் வந்தவர் 5000 ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்றதாகவும் கூறினார். மேலும் அந்த பெண் ஏமாற்றி சென்ற நபரை குறிப்பிட்டு அவனை வர சொல்லு என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நேராக முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு சென்று புகார் அளிப்பதாகவும் கூறினார். இதனை அந்த பகுதி மக்கள் செல்போனில் வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.