திருநெல்வேலி மார்க்ஸிஸ்ட் அலுவலகத்தில் வைத்து காதல் திருமணம் செய்து வைக்கப்பட்ட விவகாரத்தில் பெண்ணை தங்களுடன் அனுப்பி வைக்க வேண்டி  பெண்ணின் தாயும் அவருடைய  சகோதரரும் வழக்கறிஞரின் காலைப் பிடித்துக் கெஞ்சி கதறிய காட்சிகள் வெளியாகியுள்ளன.

அந்த வீடியோவில் வழக்கறிஞர் காலை பிடித்து உங்களுக்கு இரக்கமே கிடையாதா? எங்க பொண்ண எங்க கூட அனுப்பி வைங்க என்று அந்த பெண்ணின் சகோதரர் கெஞ்சுகிறார். மேலும் அந்த பெண்ணின் தாயார் தரையில் படுத்து கெஞ்சிக் கதறும் வீடியோவானது தற்போது வெளியாகியுள்ளது.