இந்த வருடம் தீபாவளி பண்டிகை ஆனது நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை  கொண்டாடுவதற்காக தமிழகம் முழுவதும் வெளியூர்களிலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு இலட்சக்கணக்கான மக்கள் பேருந்துகளிலும், ரயில்களிலும் செல்வது வழக்கம். இவ்வாறு அதிகப்படியான மக்கள் செல்வதால் கூட்ட நெரிசலை தவிர்க்க  ரயில்களும் பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும். இவ்வாறு சிறப்பு ரயில்களை விட்டால் கூட மக்கள் கூட்டத்திற்கு ஈடு செய்ய முடியாது.

இந்நிலையில் இதற்கான டிக்கெட் முன்பதிவு தென் மாவட்ட விரைவு ரயில்களில் விற்று தீர்ந்த நிலையில், காத்திருப்போர் பட்டியல் 200-ஐ தாண்டியுள்ளது. இதனால் தங்கள் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக நெல்லை, கன்னியாகுமரி, பாண்டியன், அனந்தபுரி, முத்துநகர் ஆகிய விரைவு ரயில்களில் தலா 2 முன்பதிவு பெட்டிகளை இணைத்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.