ஆவின் பால் உள்ளிட்ட பொருள்களின் விலை உயர்வால் ஏற்கெனவே மக்கள் அதிருப்தி அடைந்துள்ள நிலையில், ஆவின் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் நெய், வெண்ணெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அரை கிலோ நெய் 50 உயர்ந்து 365க்கும், ஒரு கிலோ நெய் 70 உயர்ந்து 700க்கும், அரை கிலோ வெண்ணெய் 15 உயர்ந்து 275க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு நேற்று முதல் அமலுக்குவந்தது.

இந்நிலையில் 4.5 லட்சம் தமிழக பால் உற்பத்தியாளர்களின் நலனை மேம்படுத்தவே, நெய் மற்றும் வெண்ணெய் ஆகியவையின் விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆவின் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆவின் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘சந்தையில் பிற நிறுவனங்களை விட ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் ஆகியவை விலை குறைவாகவே உள்ளது. எனவே, மக்கள் ஆவின் பொருட்களை பால் உற்பத்தியாளர்களின் நலனை மேம்படுத்த உதவ வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது