சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி இடையே மேம்பாலத்தில் இயக்கக்கூடிய பறக்கும் வகையில் இயக்கப்பட்ட வரும் நிலையில் இந்த வழித்தடத்தில் சேப்பாக்கம், மந்தைவெளி, கிரீன்வேஸ் சாலை உள்ளிட்ட முக்கிய பறக்கும் ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன. சென்னை சாலைகளில் உள்ள போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக லட்சக்கணக்கானோர் நாள்தோறும் இந்த ரயிலில் பயணிக்கின்றனர்.

இந்த நிலையில் பறக்கும் ரயில் நிலையங்களில் போதிய கழிவறை வசதிகள் மற்றும் கடைகள் இல்லாததால் சில இடங்கள் சுகாதாரமின்றி இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து பறக்கும் ரயில் நிலையங்களை கையகப்படுத்தி மெட்ரோ ரயில் நிலையங்களை போல வணிக வளாகங்கள் மற்றும் உணவகங்கள் என மேம்படுத்த சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம் முடிவு செய்துள்ளது. அதற்கான வணிக திட்ட அறிக்கை தயார் செய்வதற்கான நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான டெண்டர் சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குடும்பம் தற்போது வெளியிட்டுள்ளது