அதிவேகமாக செல்வது என்பது மிகவும் ஆபத்தானது ஒன்று. அது வாகனத்தை இயக்குபவர்கள் மட்டுமல்லாமல், சுற்றி இருக்கும் பிறரையும் பாதிக்கும். பாதுகாப்பாக செல்லும் நபருக்கும் இதனால் பிரச்சனை தான். அப்படி ஒருவர் தான் வேகமாக செல்வதை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில், அவர் மிக வேகமாக வாகனத்தை இயக்கி செல்வது பதிவாகியுள்ளது. கிட்டதட்ட அவர் மணிக்கு 150 கிலோ மீட்டருக்கும் மேல் அதிகமான வேகத்தில் தான் சென்றிருப்பார் என கூறப்படுகிறது.

அப்போது முன்னாள் சென்று கொண்டிருந்த நான்கு சக்கர வாகனம் ஒன்றை முந்த முயலும் போது அவர் சற்றும் எதிர்பாராத நேரத்தில் எதிரே மற்றொரு நான்கு சக்கர வாகனம் அவரை நொடி பொழுதில் கடந்து சென்று விட்டது. நூலிலேயே உயிர் தப்பி விட்டார்கள் என கூறி கேட்டிருப்போம். நிஜமாகவே இந்த வீடியோவில் நூலிழை  இடைவெளி தான் அவர் உயிரை காப்பாற்றியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலர் அவருடைய டிரைவிங் திறமையை பாராட்டுவதாக நினைத்து அவருடைய இந்த தவறான செயலை ஊக்கப்படுத்தி வருகின்றனர். சிலர் இது தவறு என சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.