
நீலகிரி மலை சேவை ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. தண்டவாள பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் மேட்டுப்பாளையம் குன்னூர் இடையே மீட்டர் கேஜ் பாதையில் இன்ஜின்களால் 15 கிலோ மீட்டர் வேகத்திற்கு குறைவாக இயக்கப்படும் மலை ரயிலில் பயணிப்போம் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை ரசித்து செல்கிறார்கள். மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். சீரமைப்பு பணிகள் முடிவடைந்த பிறகு மீண்டும் ரயில் சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.