
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 14வதுலீக் ஆட்டத்தில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சொந்த மண்ணில் குஜராத் அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்தது. நடைபெற்ற இரண்டு போட்டிகளுமே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற பெங்களூரு அணியானது தன்னுடைய சொந்த மைதானத்தில் முதன் முதலாக தோல்வியை சந்தித்துள்ளது. இந்த போட்டியின் போது குஜராத் அணியின் சார்பாக விளையாடிய பந்துவீச்சாளர் முகமது சிராஜ் அட்டகாசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி 19 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை கைப்பற்றினார்.
இந்த நிலையில் போட்டியின் போது முதல் ஓவரை வீச வந்த முகமது சிராஜ் விராட் கோலிக்கு எதிராக பந்த வீச முடியாமல் கண்கலங்கிய எமோஷனல் தருணம் அனைவருடைய மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. விராட் கோலிக்கு எதிராக பந்தை வீச ஓடிவந்த சிராஜு பேட் உடன் நின்ற விராட் கோலியை பார்த்து அவருக்கு எதிராக பந்து வீச முடியாமல் ஒரு கணம் கண்ணீர் தழும்ப பந்தை வீச முடியாமல் அவரிடம் இருந்து மன்னிப்பு கேட்டு சென்று மீண்டும் பந்து வீச தயாராகி உள்ளார். அதனை கண்ட விராட் கோலியும் ஒரு நொடி சற்று எமோஷனலாக மாறியுள்ளார். அதாவது கடந்த ஏழு வருடங்களாக தன்னுடைய மூத்த சகோதரரை போன்று அருகில் இருந்து பார்த்து அவருடைய ஆதரவில் இருந்து வந்த சிராஜ் தற்போது விராட் கோலிக்கு எதிராகவே தான் பந்து வீசு நிலமை வந்து விட்டதே என்று எண்ணி கண் கலங்கியுள்ளார்.