இஸ்ரேல் நாட்டின் நீதித்துறையை அடக்கும் வகையிலான புதிய திட்டங்கள் பரிந்துரைக்கப்பட உள்ளது. இதில் நீதிபதிகளை பணியமத்துவதில் அரசியல்வாதிகளுக்கு அதிக அதிகாரம் வழங்கும் மசோதாவிற்கு வாக்கெடுப்பு நடத்தப்பட இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டு பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினர். மேலும் அவர்கள் நாடாளுமன்றத்தின் வாயிலில் ஒன்று திரண்டு இந்த திட்டத்திற்கு எதிராக முழக்கமிட்டனர்.

அது மட்டுமில்லாமல் ஜெருசலேமின் ரயில் நிலையம் மற்றும் மேற்கு சுவர் பகுதிகளில் ஜனநாயகம் என்று முழக்கமிட்டு தங்களுடைய எதிர்ப்பை காட்டியுள்ளனர். அது மட்டுமில்லாமல் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒன்றினைந்து அரசு முன்மொழிந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு அவர்கள் அனைவரும் நாற்காலிகளில் ஏறி நின்று வாக்கெடுப்பை நடத்த விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.