
நாடு முழுவதும் 2025 ஆம் ஆண்டுக்கான நீட்டி இளநிலை தேர்வு மே நான்காம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 23 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் இளநிலை தேர்வில் முடிவுகள் இன்று வெளியானது. எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா யுனானி உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வு எழுதிய மாணவர்கள் http://neet.nta.nic.in என்ற இணையதளம் வாயிலாக முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
இந்த நிலையில் இளநிலை நீட் தேர்வு முடிவுகளில் டாப் 100 ரேங்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு மாணவர்கள் இடம் பிடித்து அசத்தியுள்ளனர். சூரியநாராயணன் என்பவர் தேசிய அளவில் 27-வது இடமும், தமிழ்நாடு அளவில் முதலிடமும் பிடித்துள்ளார்.