அசாமில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு உணவு பாதுகாப்பு உறுதி செய்வதற்காக ஜனவரி 7ஆம் தேதி மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவச அரிசி வழங்குவதற்காக 2022-ம் வருடம் அமல்படுத்தப்பட்ட உணவு பாதுகாப்பு விதிகளின் விதி 4-ஐ திருத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013 மாநில அரசு மஸ்ட்டர் ரோல் பணியாளர்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஓய்வு பெற்ற தரம் நான்கு ஊழியர்களுக்கு இந்த பலன் கிடைக்க உள்ளது.

அதுமட்டுமின்றி குடும்ப வருமானம் வருடத்திற்கு நான்கு லட்சத்திற்கும் குறைவான ஒப்பந்த பணியாளர்கள் போன்றோருக்கு இந்த திட்டத்தின் பலன் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.பயனாளிகளின்  நோக்கத்தை விரிவு படுத்துவதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களின் அனைத்து பிரிவினருக்கும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை கிடைப்பதை உறுதி செய்வது இந்த திட்டத்தின் நோக்கம்.