பெரும்பாலும் மக்கள் வங்கிகளில் பணத்தை சேமிப்பதை விட தபால் நிலையங்களில் பணத்தை சேமிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த நிலையில் இந்திய அரசாங்கம் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான விதிமுறைகளை மாற்றம் செய்துள்ளது. அதாவது மகிளா சம்மன் சேமிப்பு திட்டம் அடுத்து இரண்டு வருடங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு 7.5% வட்டி கொடுக்கப்படுகிறது.

4 லட்சத்திலிருந்து ஒன்பது லட்சம் வரையும் கூட்டுக்கணக்கு வைத்திருப்பவர்களுக்கான வரம்பு ஒன்பது லட்சத்திலிருந்து 17 லட்சம் வரையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கு அதிகபட்ச வரம்பு 15 லட்சத்திலிருந்து 30 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது . மேலும் தபால் அலுவலக திட்டங்களில் முதலீடு செய்து விட்டு திட்டம் முடிவதற்கு முன்பாகவே திரும்ப பெற விரும்பினால் தபால் அலுவலக சேமிப்பு கணக்கு விகிதத்தில் வட்டி வழங்கப்படும்.