முகேஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண முந்தைய நிகழ்ச்சிகளை பல பிரபலங்களும் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் நீடா அம்பானி காஞ்சிபுரம் புடவையுடன் அணிந்திருந்த மரகத நெக்லஸ் மதிப்பு சுமார் 500 கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நீடா அம்பானி அணிந்து இருந்த மரகத நெக்லஸ் போலவே இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

அந்த வகையில் ஜெய்ப்பூரைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் நீடா அம்பானி நெக்லஸ் விலை வெறும் 178 ரூபாய் என்று கூறி விற்பனை செய்யக்கூடிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த  நெக்லஸ் பல்வேறு வண்ணங்களில் கற்கள் பதிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இருந்தாலும் அவர் அணிந்திருந்தது போன்று மரகத பச்சை நெக்லஸ் தான் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த வியாபாரியின் தொழில்நுட்பத்தை பாரட்டி பலரும் தங்களை கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.