
ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் பகுதியில் சித்தார்த் வர்மா (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் சினிமா உதவி இயக்குனர் ஆவார். இவர் ஹைதராபாத்தில் வசித்து வரும் நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக 26 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் அவருக்கு அறிமுகமானார். அந்த இளம்பெண்ணிடம் நீங்க மிகவும் அழகா இருக்கீங்க என்று கூறியதோடு சினிமாவுக்கு நடிக்க வந்தால் சிறந்த எதிர்காலம் இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். இதை நம்பிய அந்த இளம் பெண் அவரிடம் செல்போன் நம்பரை கொடுத்து பேச ஆரம்பித்தார்.
இந்நிலையில் ஒரு நாள் அவர் இளம்பெண்ணை போட்டோ சூட் நடத்த வேண்டும் என்று வீட்டிற்கு அழைத்துள்ளார். அதை நம்பி இளம்பெண் அங்கு சென்ற நிலையில் மது போதையில் இருந்த அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அதோடு அட்ஜஸ்ட் செய்தால் வாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறியதால் அந்த பெண்ணும் அதனை நம்பி அவருடன் உறவு வைக்க சம்பதித்தார். இதைத்தொடர்ந்து பலமுறை இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். ஆனால் அவர் சினிமாவில் வாய்ப்புகள் வாங்கிக் கொடுக்காததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.