இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆன்லைன் மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக அரசு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நிறுவனங்கள் மீதான சைபர் தாக்குதல் இந்தியாவில் சராசரியை விட 90 சதவீதம் அதிகமாக உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆறு மாதங்களில் இந்திய நிறுவனங்களை ஹேக்கர்கள் சராசரியாக 2444 முறை ஹேக் செய்துள்ளனர். இது உலக அளவில் 1151 முறையாக உள்ளது. பெரும்பாலான சைபர் தாக்குதல்கள் மின்னஞ்சல் மூலமாகவே நடப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே மின்னஞ்சல்களை கையாள்வதில் கவனமாக இருக்க வேண்டும் என சைபர் கிராம் போலீசார் எச்சரித்துள்ளனர்.