
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் பகுதியில் கடந்த 13ஆம் தேதி மகா கும்பமேளா தொடங்கிய நிலையில் 45 நாட்கள் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி புனித நீராடினார். இதனை பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து மோடியை விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், சுப்ரீம் தலைவர் புனித நீராடினார். இது அவர் செய்த பாவங்களுக்கான பிராயசித்தமா என்று பதிவிட்டுள்ளார். மேலும் முன்னதாக நடிகர் பிரகாஷ் ராஜ் மகா கும்பமேளாவில் புனித நீராடியது போன்று இணையதளத்தில் போலி போட்டோக்கள் வைரலான நிலையில் அவர் தன்னுடைய பாவங்களை போக்க நீராடினாரா என்று சமூக வலைதளத்தில் விமர்சனங்கள் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.