இந்தியாவில் விவசாயிகளுக்கு தேவையான பொருளாதார உதவிகளை செய்யும் விதமாக விவசாய வங்கி கடன் அட்டை என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. கிசான் கிரெடிட் திட்டம் என்று அழைக்கப்படும் இந்த திட்டம் மிக குறைந்த வட்டியில் விவசாயிகளுக்கு கடன் உதவிகள் வழங்குகிறது. இந்த திட்டத்தில் விவசாயிகளுக்கான விபத்து காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.

இதுவரை கடன் அட்டை இல்லாத விவசாயிகள் தங்களுடைய ஆதார் அட்டை, சிட்டா, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை சமர்ப்பித்து புதிதாக விவசாய கடன் அட்டைகளுக்கு விண்ணப்பிக்கலாம். தற்போது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூர் தாலுகாவில் கபிலர்மலை வட்டார மேலாண்மை துறை சார்பாக விவசாயிகளுக்கு வேளாண் கடன் அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்று வரும் நிலையில் விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.