ஆத்தூர் மாவட்டத்தில் உள்ள சிறைச்சாலை நிர்வாக காரணங்களால் சில மாதங்களுக்கு முன்பு  மூடப்பட்டது. இதனால் அந்த சிறைச்சாலையில் உள்ள கம்ப்யூட்டர் மற்றும் சில பொருட்களை பாதுகாப்பதற்காக காவலர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டு வந்தனர். ஒவ்வொரு காவலர்களும் அவர்களது அன்றைய பணியை முடிக்கும் போது அங்குள்ள பொருட்களின் பட்டியல் கணக்கை கொடுக்க வேண்டும்.

இதன்படி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முதல் நிலை காவலரான தனபால் என்பவர் பணியில் ஈடுபட்டிருந்தார். அவர் அன்றைய நாள் வேலை முடிந்த பின்பு பொருட்களின் பட்டியல் கணக்கை கொடுப்பதற்காக தனபால் சென்றபோது நிதானமின்றி இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் பொருள்களின் பட்டியல் கணக்கை சரியாக சொல்லாமல் உளறியுள்ளார்‌ இதனால் சந்தேகம் அடைந்த மற்ற போலீசார் தனபாலை பரிசோதனை செய்து பார்த்தனர்.

அப்போது தனபால் மதுபோதையில் இருந்தது உறுதியானது. இதுகுறித்து உயர் அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி, பணி நேரத்தில் மது போதையில் இருந்த முதல் நிலை காவலரான தனபாலிடம் விசாரணை மேற்கொண்டு அவரை பணியிட நீக்கம் செய்யுமாறு சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.