2023-2024 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி  தமிழக அரசின் திருத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. காகிதம் இல்லா இ-பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர், நிலவழிகாட்டி மதிப்பை 2017 ஜூனுக்கு முன்பு வரை கடைபிடிக்கப்பட்டு வந்த வழிகாட்டு மதிப்பிற்கு ஈடாக உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

வழிகாட்டி மதிப்பில் திருத்தத்தை பரிந்துரைக்க ஒரு குழுவை அரசு அமைத்துள்ளது. அந்த குழு அளிக்கும் பரிந்துரையின் படி நில வழிகாட்டி மதிப்பை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 21ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.