2023-2024 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி  தமிழக அரசின் திருத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. காகிதம் இல்லா இ-பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

அதனை தொடர்ந்து பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர், நடப்பு ஆண்டு முதல்வரின் முகவரி திட்டத்தில் 17.7 லட்சம் மனுக்களில் 17.3 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. கள ஆய்வில் முதல்வர் திட்டத்தில் அடுத்த கட்டமாக அனைத்து ஊராட்சி, நகரப்புற பகுதிகளில் ஒரு புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் பி.டிஆர் தெரிவித்துள்ளார். ரூ 4,236 கோடி மதிப்புள்ள 4,491 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது எனவும் அறிவித்துள்ளார்.