தமிழக சட்டசபையில் நேற்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் 2023-24 தாக்கல் செய்தார். அதன் பிறகு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இந்நிலையில் பட்ஜெட்டின் முக்கிய சிறப்பம்சங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.

1. வருவாய் பற்றாக்குறை 60,000 கோடியில் இருந்து 30 ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது

2. மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து, நடராஜனுக்கு சென்னையில் நினைவிடம்.

3. அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோருக்கு ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கீடு.

4. இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 223 கோடியில் புது வீடுகள்

5. ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் போன்ற தேர்வுகளை எழுதும் மாணவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட‌ 1000 மாணவர்களுக்கு முதல் நிலை தேர்வுக்கு தயாராக மாதம் 7500 உதவித்தொகை வழங்கப்படும். அதன் பிறகு முதன்மைத் தேர்வுக்கு ரூபாய் 25 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். இதற்காக ஆண்டுக்கு 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

6. சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் புதிய பன்னோக்கு பிரிவு அமைக்கப்படும்.

7. சென்னையில் உள்ள கிண்டியில் 1000 படுக்கை வசதிகளுடன் கட்டப்படும் கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை நடப்பாண்டில் திறக்கப்படும்.

8. பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்கள் கட்டுவதற்கு 1500 கோடி நிதி ஒதுக்கீடு.

9. உயிர் தியாகம் செய்த தமிழ்நாட்டு படை வீரர்களுக்கு வழங்கப்படும் கருணைத்தொகை 20 லட்ச ரூபாயிலிருந்து 40 லட்சமாக உயர்த்தப்படும்.

10. மூத்த தமிழரிஞர்கள் 591 பேருக்கு இலவச பேருந்து பயண அட்டை

11. பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 40 கோடி நிதி ஒதுக்கீடு.

12. 54 அரசு தொழில்நுட்பக் கல்லூரிகள் 2283 கோடி நிதி மதிப்பீட்டில் திறன்மிகு மையங்களாக மாற்றப்படும்.

13. நகர்புற ஊரகப் பகுதிகளில் அயோத்திதாசர் மற்றும் ஆதிதிராவிடர் பண்டிதர் குடியிருப்பு திட்டம் மேம்படுத்தப்படும்

14. புதிய வண்ணார் வாரியத்திற்கு 10 கோடி நிதி ஒதுக்கீடு

15. முதலமைச்சரின் காலை உணவு விரிவாக திட்டத்திற்கு 500 கோடி நிதி ஒதுக்கீடு.

16. மதுரை, கோவை, திருச்சி, நீலகிரியில் 100 கோடி மதிப்பீட்டில் புதிய விடுதிகள்

17. சென்னையில் புதிய விளையாட்டு மையம் மற்றும் சர்வதேச தளத்திலான விளையாட்டு மையம் அமைக்கப்படும்.

18. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்க 20000 கோடி இலக்கு

19. பெண் தொழில் முனைவோருக்கு புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்

20. சேலம், திருச்சி, கோவை, மதுரை, தாம்பரம், ஆவடி, சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் பொது இடங்களில் இலவச வைஃபை சேவை

21. வியாசர்பாடி, திருவான்மியூர், வடபழனியில் பேருந்து நிலையங்களை மேம்படுத்த 1600 கோடி நிதி ஒதுக்கீடு

22. சேலத்தில் 800 கோடி நிதி மதிப்பீட்டில் 119 ஏக்கர் பரப்பளவில் புதிய ஜவுளி பூங்கா.

23. 1000 புதிய பேருந்துகள் வாங்கப்படும். 500 பழைய பேருந்துகளை புதுப்பிக்க 500 கோடி நிதி ஒதுக்கீடு.

24. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை 1500 கோடியாக அதிகரிப்பு. கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு 2000 ரூபாயாக உதவி தொகை அதிகரிப்பு

25. சென்னை தீவுத்திடலில் 50 கோடி நிதி மதிப்பீட்டில் 30 ஏக்கர் நிலப்பரப்பில் நகர்ப்புற பொது சதுக்கம், கண்காட்சி அரங்குகள் மற்றும் திறந்தவெளி திரையரங்கம் அமைக்கப்படும்.

26. கோவையில் 172 கோடி நிதி ஒதுக்கீட்டில் செம்மொழிப் பூங்கா

27. தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள 800 கோடி நிதி மதிப்பீட்டில் 10,000 ஊரணிகள் மற்றும் குளங்கள் புதுப்பிக்கப்படும்.

26. மரக்காணத்தில் 25 கோடி நிதி மதிப்பீட்டில் புதிய பறவைகள் சரணாலயம்.

27. குடும்ப தலைவிகளுக்கு செப்டம்பர் 15 முதல் மாதம் ரூ. 1000 வழங்க 7000 கோடி நிதி ஒதுக்கீடு.

28. அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா நிர்வாகத்தில் வெளிப்படை தன்மையை அதிகரிக்க 38.52 கோடி நிதி ஒதுக்கீடு.

29. 16,500 மெகாவாட் மின் திறன் கொண்ட 15 புதிய மின் திட்டங்கள் செயல்படுத்தப்படும். காற்றாலைகளில் செயல் திறனை மறுசீரமைக்க புதிய கொள்கை நோக்கப்படும். மின் தரவுகளை தானியக முறையில் பெற அனைத்து இணைப்புகளிலும் ஸ்மார்ட் மீட்டர்கள் நிறுவப்படும்

30. நாகூர் தர்காவை புதுப்பிக்க 2 கோடி நிதி ஒதுக்கீடு. கிறிஸ்தவ தேவாலயங்களை 6 கோடி நிதி ஒதுக்கீடு.

31. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்கு 7145 கோடி நிதி ஒதுக்கீடு

32. தமிழர் பண்பாட்டு தளங்களை இணைக்க தமிழ் பண்பாட்டு கடல்வழி பயணங்கள் ஊக்குவிக்கப்படும்

33. ஈரோடு, திருநெல்வேலி மற்றும் செங்கல்பட்டில் மினி டைட்டில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள்

34. பழனி, சமயபுரம், திருத்தணி ஆகிய கோவில்களில் பெருந்திட பணிகள் 485 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்

35. நடப்பு நிதியாண்டில் 574 கோவில்களில் குடமுழுக்கு விழா நடத்தப்பட்டுள்ளது. இதேபோன்று வரும் நிதி ஆண்டில் 400 கோவில்களின் பணிகள் முடிக்கப்பட்டு குடமுழுக்கு விழா நடத்தப்படும்.

36. நிலம் வாங்குவோரின் சுமையை குறைக்க பத்திரப்பதிவு கட்டணத்தை 5 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாக குறைக்க அரசு முடிவு.

37. அரசு பணியாளர்களுக்கு வீடு வீடு கட்டுவதற்கான முன்பணம் 40 லட்ச ரூபாயிலிருந்து 50 லட்ச ரூபாயாக உயர்வு

38. விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள். இதன் மூலம் 22,000 பேருக்கு வேலை வாய்ப்பு.

39. விருதுநகரில் 1800 கோடி மதிப்பீட்டில் 1150 ஏக்கர் பரப்பளவில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் நிதி பங்களிப்போடு ஜவுளி பூங்கா.

40. சென்னையில் கழிவறைகளை கட்ட 430 கோடி நிதி ஒதுக்கீடு. சென்னையில் வெள்ள தடுப்பு பணிக்காக 320 கோடி நிதி ஒதுக்கீடு. அடையாறு மற்றும் கூவம் சீரமைப்புக்கு 1500 கோடி நிதி ஒதுக்கீடு.

41. ஈரோட்டில் தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம்

42. ஈரோட்டில் உள்ள கோபிசெட்டிபாளையம் 8000 பரப்பளவில் புதிய வனவிலங்கு சரணாலயம்

43. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உணவு மானியத்திற்காக 10,500 கோடி நிதி ஒதுக்கீடு. மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்க 320 கோடி நிதி ஒதுக்கீடு

44. மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு 18,661 கோடி நிதி ஒதுக்கீடு

45. ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ரூ. 3513 கோடி நிதி ஒதுக்கீடு

46. உயர்கல்வித்துறைக்கு 6967 கோடி நிதி ஒதுக்கீடு

47. பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 40,299 கோடி நிதி ஒதுக்கீடு

48. மாற்றுத்திறனாளிகள் நலன் துறைக்கு 1444 கோடி நிதி ஒதுக்கீடு.

49. கூட்டுறவுத்துறைக்கு 16,262 கோடி நிதி ஒதுக்கீடு

50. வனம் மற்றும் சுற்றுலாத்துறைக்கு 1248 கோடி நிதி ஒதுக்கீடு

51. தொழில்துறைக்கு 368 கோடி நிதி ஒதுக்கீடு

52. சமூக நலத்துறைக்கு 5436 கோடி நிதி ஒதுக்கீடு.