சந்திரயான் 3 திட்டத்தில் நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கி ஆய்வு செய்யும் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் தற்போது ஓய்வு நிலையில் உள்ளது. இவற்றை மீண்டும் செயல்படுத்த இஸ்ரோ தயாராகி வருகின்றது. இந்நிலையில் ஸ்லீப் மோடில் இருக்கும் பிரக்யான் ரோவர் மீண்டும் விழித்தெழும் என்ற நம்பிக்கை தனக்கு இன்னுமிருப்பதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார்.

சந்திரயான்-3 குறித்து பேசிய அவர், “நிலவில் நிம்மதியாக உறங்குகிற ரோவர் தானே சுறுசுறுப்பாக எழலாம். -200°C நிலையில் சிக்னல்களை பெற முயற்சித்தபோது ரோவர் வேலை செய்தது” என்றார். இதற்கிடையில், ரோவர் & லேண்டர் முறையே செப் 2,3 ஆகிய தேதிகளில் உறக்கநிலைக்குச் சென்றன.