நிலவின் தென் துருவத்தில் சூரியன் உதிக்கத் தொடங்கியதை அடுத்து இஸ்ரோ தனது பணிகளைத் தொடங்கியுள்ளது. விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரை இயக்க முயற்சிக்கிறது. -200 டிகிரி சென்டிகிரேடில் 16 நாட்கள் ஓய்வு நிலையில் செலவழித்த பிறகு, ரோவர் லேண்டரை மீண்டும் இயக்கும் நடவடிக்கைகளை இஸ்ரோ மேற்கொண்டுள்ளது.

அதன் பேட்டரிகளை மீண்டும் ரீசார்ஜ் செய்ய முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இது வெற்றி பெற்றால் மேலும் 14 நாட்கள் நிலவில் ஆய்வு நடத்தப்படும். நிலவில் 14 நாட்கள் பகல், 14 நாட்கள் இரவு என்பதால் நேற்று முதல் பகல் பொழுது ஆரம்பித்துள்ளது.