
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த வருடம் நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திராயன் விண்கலத்தை நிலவுக்கு வெற்றிகரமாக அனுப்பினர். அங்கு விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவற்றை தரையிறக்கி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் தற்போது நிலவின் துருவப் பகுதிகளில் தண்ணீர் இருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அதாவது நிலவில் 5 முதல் 8 மீட்டர் ஆழத்தில் பனிக்கட்டிகளாக நீர் உறைந்திருக்கலாம் என்று கூறியுள்ளனர். அதோடு நிலவின் தென் துருவத்தை விட வட துருவத்தில் பல மடங்கு பனிக்கட்டிகள் இருக்கலாம் என்றும் கூறியுள்ளனர். பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக ஏற்பட்ட எரிமலை சீற்றத்தின் காரணமாக நிலவின் மேற்பரப்பில் நீர் உருவாகி இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மேலும் நிலவில் துளையிட்டு ஆய்வு செய்ய இஸ்ரோ திட்டமிட்டுள்ளதால் இது குறித்த உறுதியான தகவல்கள் விரைவில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.