நில உரிமையாளர்கள் அனைவருமே கட்டாயமாக வைத்திருக்க வேண்டியது பட்டா. வருவாய்துறை சார்பாக இந்த ஆவணமானது வழங்கப்படுகிறது. இதில் நில உரிமையாளரின் பெயர், நிலம் வகை, நிலம் அமைந்துள்ள பகுதி, சர்வே எண் போன்ற முக்கியமான தகவல்கள் இருக்கும். இந்த நிலையில் பட்டா பெறுவதற்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவது தொடர்பான முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. வருவாய் துறையோடு இணைந்து பட்டா பெறுவதற்கு ஏதுவாக சிறப்பான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

விற்பனை பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை ஒப்படைத்து இந்த முகாம்களில் பட்டா பெற்றுக் கொள்ளலாம். 24 முதல் 28 வது சிறப்பு முகாம்கள் நடந்தது. இந்த நிலையில் வரும் எட்டாம் தேதி வரை  நடைபெறும் சிறப்பு முகாம்களில் வீட்டுமனைதாரர்கள் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலமாக சென்னை பெருநகரம் மற்றும் தமிழ்நாடு புறநகர வளர்ச்சி திட்டத்தில் பணிகளுக்கான ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு கிரைய பத்திரமாக அதற்கான சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. மேலும்  முகாம் நடைபெறும் நாள் மற்றும் திட்ட பகுதிகள் குறித்த தகவல்களை https://tnuhdb.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.