தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான அமலாபால் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலமாக அறிமுகமாகி விஜய், விக்ரம் போன்ற பல முன்னணி நடிகர்களோடும் சேர்ந்து நடித்துள்ளார். இவர் நடிப்பில் உருவான கடாவர் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது. சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் பயணங்கள் செல்வதிலும் அதிக ஆர்வம் கொண்டவர்.

இந்நிலையில் மலையாளத்தில் பிருத்விராஜ், அமலாபால் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆடுஜீவிதம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சர்ச்சை கிளப்பியுள்ளது. மலையாளத்தில் லிப் லாக் சீன்கள் அரிதாக காட்சிப்படுத்தப்படும் நிலையில், ட்ரெய்லரில் லிப் லாக் சீன் இடம்பெற்றது பேசுபொருளானது. இதுபற்றி பேட்டி ஒன்றில் அமலாபால், ‘கதைக்கு தேவைப்படும் பட்சத்தில் நிர்வாணமாக நடித்த எனக்கு, இந்த மாதிரியான காட்சி பெரிய விஷயமில்லை’ என்று கூறியுள்ளார்.