கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவத் தொடங்கி இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் அவர்களது குடும்பத்தினர் நான்கு பேரும் இந்த வைரசினால் பாதிக்கப்பட்டனர். இந்த நோய் பரவல் அம்மாநில மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நோய் பரவலை தடுக்கும் பொருட்டு கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஏழு ஊராட்சிகளில் 43 வார்டுகள் நோய் பாதிக்கப்பட்ட பகுதியாகவும் பயன்படுத்தப்பட்ட பகுதியாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கேரளாவின் அருகே உள்ள புதுவையில் நோய் பரவலை தடுக்க முக கவசம் கட்டாயப்படுத்தப்பட்டதோடு நாளை முதல் 17 ஆம் தேதி வரை மாநிலத்தில் உள்ள மாஹே மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. நிபா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அளித்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.