சமூக வலைதளங்களில் தற்போது காட்டுத்தீயாகப் பரவி வரும் ஒரு வீடியோ இணையவாசிகளை உறைய வைத்துள்ளது. ஒரு கிராமத்தில் நள்ளிரவு நேரத்தில், நீண்ட உருவம் கொண்ட ஒரு பெண் ஹேண்ட் பம்ப்பில் தண்ணீர் பிடிப்பது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. அந்த மர்ம உருவம் சிறிது நேரம் தண்ணீர் பிடித்துவிட்டு, திடீரென அதே ஹேண்ட் பம்ப் வடிவிலேயே மாறி, அடுத்த நொடியே அங்கிருந்து மாயமாகிறது. இதனை வீடியோ எடுத்த நபர், இது ஒரு ‘உருமாறும் சூனியக்காரி’ (Shape-shifting Witch) என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

​இந்த வீடியோவை எடுத்த இளைஞர் தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவது இந்த விவகாரத்தை இன்னும் மர்மமாக்கியுள்ளது. எனினும், இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்துப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது அதிநவீன ஏஐ (AI) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட எடிட்டிங் வேலையாக இருக்கலாம் என்று ஒரு தரப்பு கூற, மற்றொரு தரப்பினரோ இது நிஜமாகவே நடந்த பேய் நடமாட்டம் என்று அஞ்சி வருகின்றனர். இந்த வீடியோ எந்த ஊரில் எடுக்கப்பட்டது என்பது தெரியாத நிலையில், இது மக்களிடையே தேவையற்ற பீதியை ஏற்படுத்தியுள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.