2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து நிலவி வந்த குழப்பங்களுக்கு, தைலாபுரத்தில் வைத்து பாமக எம்.எல்.ஏ அருள் முக்கியமான விளக்கத்தை அளித்துள்ளார். வரவிருக்கும் தேர்தலை பாமக நிச்சயமாக ஒரு வலுவான கூட்டணியுடன் தான் சந்திக்கும் என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

​வெற்றி பெறக்கூடிய கூட்டணியில் சேருவதே கட்சியின் நோக்கம் என்றும், அது எந்தக் கூட்டணி என்பதை கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்றும் அவர் கூறினார். பாமகவின் இந்த ‘கூட்டணி’ அறிவிப்பு, தமிழகத்தின் தற்போதைய அரசியல் வியூகங்களை மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.