என்னை தனுசு உடன் ஒப்பிட வேண்டாம் என்று கோமாளிப்பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் பிரதீப் ரங்கநாதன். அதே சமயம் லவ் டுடே திரைப்படத்தை இவரே இயக்கி இவரே நடித்திருந்த நிலையில் அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இவர் தன்னை தனுசுடன் ஒப்பிட வேண்டாம் என்று கூறியுள்ளார். நான் பேசுவது, பாடி லாங்குவேஜ் மற்றும் நடவடிக்கை எல்லாமே தனுஷ் போல இருப்பதாக நிறைய பேர் சொல்கிறார்கள். ஆனால் இது உண்மையா என எனக்கு தெரியவில்லை, என்னை பொருத்தவரை நான் வேண்டுமென்றே எதையும் செய்யவில்லை. அவர் எங்கேயோ இருக்கிறார், நான் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறேன் என்று விமர்சனங்களுக்கு பிரதீப் ரங்கநாதன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.