தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக 14 வருடங்களுக்கு பிறகு திரிஷா நடிக்கிறார். லோகேஷ் – விஜய் கூட்டணியில் உருவாகிவரும் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி வருகிறது. இந்த நிலையில் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் லியோ படத்திற்கு ஆறு வாரங்களுக்கு முன்பாகவே செப்டம்பர் 7ஆம் தேதி முதல் லண்டனில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது.