ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியானது நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.  இந்த தொடர் முதலில் பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறுவதாக இருந்தது .ஆனால் பாதுகாப்பு பிரச்சினை காரணமாக இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் துபாயில் நடைபெற்றது. இதில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா தோல்வியை சந்திக்காமல் கோப்பையை கைப்பற்றியது. இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஒரு வெற்றி கூட பெறாமல் பரிதாபமாக வெளியேறியது. ஆனால் இந்த அணியை அந்த நாட்டின் பல முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்து கொண்டார்கள்.

இதனால் தற்போதைய பாகிஸ்தான் அணியை இந்திய அணியின் பி அணியே எளிதில் தோற்கடிக்க முடியும் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சனம் செய்திருந்த நிலையில் இதற்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் பதிலடி கொடுத்துள்ளார். அதாவது இந்தியா போட்டியில் வெற்றி பெற்றது. அவர்கள் நன்றாக விளையாடினார்கள். ஆனால் மிஸ்டர் கவாஸ்கர் புள்ளி விவரங்களை பார்க்க வேண்டும்.ஒருமுறை அவர் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவதில் இருந்து தப்புவதற்காக ஹார்ஜாவுக்கு பறந்தார்.

அவர் எங்களை விட வயதானவர் சீனியர். நாங்கள் அவரை மிகவும் மதிக்கிறோம். உங்கள் அணியை தேவையான அளவுக்கு பாராட்டுங்கள். ஆனால் மற்ற அணிகளை இப்படி பேசுவது நல்லதல்ல .அவருக்கு பாகிஸ்தான் எங்கே இருக்கிறது என்று தெரியும். நான் அவருடைய கருத்தால் ஆழமான காயத்தை சந்தித்தேன். அவர் சிறந்த மரியாதைக்குரிய கிரிக்கெட்டர். ஆனால் இது போன்ற கருத்துக்களை தெரிவிப்பதால் அவர் தன்னுடைய மதிப்பை குறைத்துக் கொள்கிறார் . அவர் தன்னுடைய நாவை கட்டுப்படுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.