நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 14 தவணை வழங்கப்பட்டுள்ள நிலையில் 15வது தவணை நாளை மத்திய அரசு பயணர்களின் வங்கி கணக்குகளில் செலுத்த உள்ளது.

பிரதமர் மோடி தன்னுடைய கரங்களாலேயே 8 கோடி விவசாயிகளின் கணக்குகளில் 2000 ரூபாய் பணத்தை செலுத்த உள்ளது. இதற்கான நிகழ்ச்சியை ஜார்கண்டில் தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 11 கோடி விவசாயிகளுக்கு பணம் வழங்கப்பட்டு வந்த நிலையில் கட்டுப்பாடுகள் காரணமாக அது எட்டு கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.