இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமக்களுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் உள்ள அனைத்து விவரங்களையும் எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும். அதே சமயம் ஆதார் அட்டையை மிகவும் பத்திரமாக பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். அரசு வழங்கக்கூடிய ஆதார் அட்டை மிகவும் நீளமாகவும் பேப்பர் வடிவத்திலும் இருக்கும். இதனால் இதனை மக்கள் வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்லும் போது சேதம் ஏற்படலாம். இதனை தவிர்க்க ஆதார் அட்டையின் பிவிசி கார்டுகள் பெற்றுக் கொள்ளலாம். இதனை எப்படி பெறுவது என்பது குறித்து பார்க்கலாம்.

அதற்கு முதலில் UIDAI இணையதளத்தில் சென்று உங்களுடைய ஆதார் அல்லது யுஐடி நம்பரை பதிவு செய்து ஆதார் உடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரை பதிவிட வேண்டும்.

பின்னர் உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி எண் உள்ளிட்டு முகவரியை தேர்வு செய்ய வேண்டும்.

அதன்பிறகு 50 ரூபாய் கட்டணம் செலுத்திய பிறகு உங்கள் ஆதார் PVC கோரிக்கை ஏற்கப்படும்.

இதனை ட்ராக் செய்து கொள்ளும் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

பிவிசி ஆதார் அட்டை 15 வேலை நாட்களுக்குள் உங்களது முகவரிக்கு அனுப்பப்படும்.