இந்திய பத்திரிக்கையாளர்கள் ஷாஹீன் அப்ரிடியிடம் செல்ஃபி கேட்டதற்கு பதிலளித்த ஷஹீன் அப்ரிடி, 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு செல்ஃபி எடுப்பேன் என்று கூறினார்.  

ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 இன் முக்கியமான ஆட்டம் இந்தியா-பாகிஸ்தான் இடையே அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை 2மணிக்கு நடைபெறுகிறது. இந்த போட்டிக்காக இரு அணிகளும் அகமதாபாத் சென்றடைந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஷஹீன் உட்பட பாகிஸ்தான் அணியின் அனைத்து வீரர்களும் பயிற்சி செய்து வருகின்றனர். கேப்டன் பாபர் அசாம் மற்றும் பிற வீரர்கள் கால்பந்து விளையாடி, பின்னர் சிறப்பு பயிற்சியும் மேற்கொண்டனர்.

ஷாஹீன் ஷா அப்ரிடி முதலில் த்ரோ டவுன் பயிற்சியின் மூலம் தனது பேட்ஸ்மேன்களை வீழ்த்தினார். பின்னர் சிறிது நேரம் கழித்து அவரும் வலைகளில் பந்து வீசச் சென்றார். மேலும் ஆல்-ரவுண்டர்கள் ஷதாப் கான், முகமது நவாஸ் மற்றும் சவுத் ஷகீல் ஆகியோர் கேட்ச்சிங் பயிற்சி செய்தனர். இந்த வீரர்கள் சுமார் அரை மணி நேரம் அதிக மற்றும் குறைந்த கேட்சுகளை பயிற்சி செய்தனர்.

இதற்கு முன், அணி வீரர்கள் வட்டம் போட்டு நேரடியாக த்ரோ பயிற்சியும் செய்தனர். உலகக் கோப்பையின் முதல் 2 ஆட்டங்களில் பாகிஸ்தான் அணி 4 கேட்சுகளை கைவிட்ட நிலையில், அந்த அணியின் பீல்டர்களும் 3 முறை ரன் அவுட் வாய்ப்பை தவறவிட்டனர். அதேபோல ஹாரிஸ் ரவுஃப் மற்றும் ஷாஹீன் ஷா அப்ரிடி ஆகியோர் நெட் பயிற்சியின் போது ஒன்றாக பந்து வீசுவதைக் காண முடிந்தது.

இந்நிலையில் ரெவ்ஸ்போர்ட்ஸ் (RevSportz) வெளியிட்டுள்ள செய்தியில், ஷாஹீன் ஷா அப்ரிடி பயிற்சி முடிந்து எல்லைக் கயிற்றை நோக்கிச் செல்லும்போது, ​​சில இந்திய  ஊடகவியலாளர்கள் செல்பி எடுக்கக் கோரினர். அதற்குப் பதிலளித்த ஷஹீன், “சரூர் செல்பி லூங்கா, ஆனால் ஐந்து விக்கெட் லீனே கே பாத் [ஒன்று எடுப்பதில் மகிழ்ச்சி அடைவேன், ஆனால் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகுதான்]” என்று நகைச்சுவையாக கூறினார்.. இதனை வைத்து பார்க்கும்போது இந்தியாவுக்கு எதிராக 5 விக்கெட் எடுத்தபிறகு தான் செல்பி எடுப்பேன் என்று கூறியதாக தெரிகிறது. இந்த உலகக் கோப்பையில் ஷஹீனால் இதுவரை 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.. 

https://twitter.com/tanveercric56_/status/1712667829315735631