
CSK – RCB இடையேயான ஐபிஎல் போட்டி நாளை இரவு 7.30 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. அதன் பிறகே சிஎஸ்கே வீரர் மொயின் அலி டி20 உலக கோப்பை தொடருக்காக நாடு திரும்ப உள்ளார். ஒருவேளை நாளைய போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விட்டால் அவர் இல்லாதது அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். ஏற்கனவே பதிரனா, தீபக் சாஹர், முஸ்தஃபுசூர் ஆகியோர் அணியில் இல்லை.