இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜஹான் சமூக வலைதளங்களில் வெளியிட்ட ஒரு சர்ச்சை வீடியோ தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கனவே விவாகரத்து வழக்கு மற்றும் குடும்பத் தகராறு நீடித்து வரும் நிலையில், ஹசின் ஜஹான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அதில், அவர் யாரையும் நேரடியாகக் குறிப்பிடாமல், “நாய் போல என் பின்னால் சுற்றினான், விசுவாசமாக இருப்பான் என்று நினைத்தேன், ஆனால் அவன் பன்றி என நிரூபித்துவிட்டான்” என்று மிகக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Haseen Jahan (@hasinjahanofficial)

“>

மேலும் ஹசின் ஜஹான் இந்த வீடியோவில் ஷமியின் பெயரை நேரடியாக உச்சரிக்கவில்லை என்றாலும், அவர் மறைமுகமாக முகமது ஷமியைத் தான் தாக்கிப் பேசுகிறார் என்று கிரிக்கெட் ரசிகர்கள் கருதுகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த ஷமியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஹசின் ஜஹானை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஷமியை இப்படிப்பட்ட கேவலமான வார்த்தைகளால் ஒப்பிட்டுப் பேசியதை சகித்துக் கொள்ள முடியாத ரசிகர்கள், ஹசின் ஜஹானுக்கு எதிராகத் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வருவதால் இந்த விவகாரம் தற்பொழுது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.