உத்தரப் பிரதேசத்தில் நாய் கடித்ததைத் தொடர்ந்து ரேபிஸ் நோயின் தீவிர அறிகுறிகளுடன் நாயைப் போலக் குரைத்து, மருத்துவர்களாலும் கைவிடப்பட்ட 9-ம் வகுப்பு மாணவன் ஒருவன், அசுரத்தனமான போராட்டம் மற்றும் சரியான சிகிச்சைக்குப் பிறகு மீண்டு வந்துள்ள சம்பவம் ஒட்டுமொத்த மருத்துவ உலகையும் மிரளச் செய்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூரைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவன் கரண், வாரணாசியில் உள்ள தனது மாமா வீட்டுக்குச் சென்றிருந்தபோது அங்கு ஒரு குழந்தை வளர்ப்பு நாயுடன் விளையாடிக்கொண்டிருந்துள்ளது. அப்போது குழந்தையைக் காப்பாற்ற முயன்றபோது அந்த நாய் கரணைக் கடித்துவிட்டது. உடனடியாக அவனுக்கு தடுப்பூசி போடப்பட்டது. எனினும், ரேபிஸ் குறித்த அச்சம் காரணமாக மருத்துவமனைக்குச் சென்ற அவரிடம், மருத்துவ ஊழியர் ஒருவர் “உனக்கு ஒன்றும் செய்யாது” என்று அலட்சியமாகக் கூறியதை நம்பி கரண் வீடு திரும்பினான்.
நாய் கடித்து நான்கு மாதங்கள் வரை எந்த அறிகுறியும் இல்லாமல் இயல்பாக இருந்தவனுக்கு, மார்ச் 13 அன்று திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது. மறுநாள் விழித்தெழுந்தபோது நாய் போன்று குரைக்கத் தொடங்கினான். அவனால் பேசவும் முடியவில்லை, தண்ணீரைப் பார்த்தால் பயம் ஏற்பட்டு வாயிலிருந்து எச்சிலும் வடிந்தது. ரேபிஸ் நோயின் இறுதி கட்டத்தை அடைந்துவிட்டதாக நினைத்த குடும்பத்தினர் அவனைப் பல மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அனைத்து மருத்துவர்களும், “இனி இவன் பிழைப்பது கடினம், இருட்டு அறையில் தனியாகப் பூட்டி வையுங்கள், யாரும் தொடாதீர்கள்” என்று கையை விரித்துவிட்டனர்.
यूपी के मिर्जापुर में कुत्ते के काटने से भौंकने लगा लड़का: डॉक्टर बोले- कालकोठरी में छोड़ दीजिए; 22 दिन में ठीक हुआ, यूपी में ऐसा पहली बार
पूरा वीडियो देखने के लिए लिंक पर क्लिक करें- https://t.co/1QQO65scY2#UPNews #HindiNews #Mirzapur #DogBiteSurvivor #BHUDoctors pic.twitter.com/zEsNVVB0HG
— Dainik Bhaskar (@DainikBhaskar) August 22, 2026
குடும்பத்தினரின் கண்ணீருக்கு இடையில், உறவினர் ஒருவரின் வழிகாட்டுதலின்படி முதன்மை சுகாதார நிலையத்திற்குச் சிறுவன் கொண்டு செல்லப்பட்டான். அங்கு அவனுக்கு மருத்துவர்களின் ஆலோசனையின்படி ரேபிஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.முதல் 22 நாட்களில் 5 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. ஒரு மாதத்திற்குப் பிறகு மீண்டும் அறிகுறிகள் தென்பட்டபோது கூடுதல் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டன.
மருத்துவர்களால் கைவிடப்பட்டு, இருட்டு அறையில் அடைக்கப்பட வேண்டிய கட்டத்தில் இருந்த அந்தச் சிறுவன், தடுப்பூசிகளின் வீரியத்தாலும் மருத்துவ உதவியாலும் படிப்படியாக முழுமையாகக் குணமடைந்து இயல்பு நிலைக்குத் திரும்பினான். தற்போது அவன் வழக்கம்போல் பள்ளிக்குச் சென்று சக மாணவர்களுடன் இயல்பாகப் பேசி விளையாடி வருகிறான்.
இந்த விசித்திரமான சம்பவம் குறித்து மாவட்ட மருத்துவமனை மருத்துவர் தேவேந்திர பிரதாப் பட்டேல் விளக்கமளிுகையில், “கரன் கடிக்கப்பட்ட இடம் அவனது கை என்பதால் ரேபிஸ் வைரஸ் பரவ நீண்ட காலம் ஆகியுள்ளது. ஆனால் கழுத்து அல்லது நெஞ்சில் கடித்திருந்தால் உயிர் பிழைப்பது கடினம். மேலும், அந்த நாய் ஏற்கனவே தடுப்பூசி பெற்ற வளர்ப்பு நாயாக இருந்திருக்கலாம்.
இதனால்தான் 4 மாதங்கள் கழித்து அறிகுறிகள் வெளிப்பட்டன. நாய் கடியைப் பற்றிய பயம் மற்றும் மனநலத் தாக்கத்தினால் அவன் நாய் போல் குரைத்திருக்கக்கூடும்” என்று தெரிவித்துள்ளார். ரேபிஸ் பாதிப்பிலிருந்து ஒருவர் மீண்டு வந்திருப்பது மருத்துவ வரலாற்றில் ஒரு வியக்கத்தக்க அதிசய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
