ஹைதராபாத் சந்தன்நகர் பகுதியில் உள்ள பிரபல வி வி பிரைட் தங்கும் விடுதியில் உதய் என்ற 23 வயது இளைஞர் தனது நண்பர்களுடன் அரை எடுத்து தங்கி உள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக விடுதியில் மூன்றாவது தளத்திலிருந்து கீழே விழுந்து உதய் பரிதாபமாக உயிரிழந்தார்.

அவர் கீழே விழும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி தங்கும் விடுதியில் உள்ளே நாய் ஒன்று வந்ததை பார்த்த உதய் அதனை விரட்டி சென்றுள்ளார். அப்போது நிலை தடுமாறி அவர் மூன்றாவது தளத்திலிருந்து கீழே விழுந்தது பதிவாகி இருந்தது.

ஆரம்பத்தில் நாய் துரத்தியதில் உதய் கீழே விழுந்ததாக கூறப்பட்ட நிலையில் வெளியான சிசிடிவி காட்சிகள் உண்மையை எடுத்துரைத்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினரும் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்