
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ் செயல்படும் துணை மின் நிலையங்களில் மாதம்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அப்படி பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது சம்பந்தப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மின்தடை தொடர்பாக முன்கூட்டியே தெரிவிக்கப்படும். அந்த வகையில் நாளை நாமக்கல் மாவட்டத்திலுள்ள சேந்தமங்கலம், கெட்டிமேடு எனும் இந்த இரு பகுதிகளிலுள்ள துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணி நடைபெற இருக்கிறது.
இதன் காரணமாக சம்பந்தப்பட்ட பகுதியில் மின்தடை ஏற்படும். அதன்படி சேந்தமங்கலம், வடுகப்பட்டி, கோனானூர், பேரமாவூர், கொண்டமாநாயக்கன்பட்டி, அக்கியம்பட்டி, பழையபாளையம், சிவநாயக்கன்பட்டி, புதுக்கோம்பை, முத்துக்காப்பட்டி, பொட்டாணம், சாலபாளையம், லக்கமநாயக்கன்பட்டி, சிவியாம்பாளையம், நைனாமலை அடிவாரம், பச்சுடையாம்பட்டி, சாலையூர், பொன்னேரி, புதுக்கோட்டை, ஈச்சவாரி, கோணங்கிப்பட்டி, காளிசெட்டிபட்டி, பொம்மசமுத்திரம், கணவாய்பட்டி, கெட்டிமேடு, அ.பாலப்பட்டி, பீமநாயக்கனூர், பெருமாப்பட்டி, பொட்டிரெட்டிபட்டி, தூசூர், கொடிக்கள் புதூர், ரெட்டிபட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.